cyber crime compliant
சைபர் கிரைம் மோசடிகளை புகாரளிப்பது எப்படி?
டிஜிட்டல் காலத்தில் ஆன்லைனில் பணத்தை ஏமாற்றும் மோசடி செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆனால் பலருக்கு அதை முறையாக எப்படி புகார் அளிப்பது குறித்த தகவல் தெரியவில்லையா?
இன்றைய டிஜிட்டல் காலத்தில், ஆன்லைன் மோசடிகள் என்பது உலகம் முழுவதும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. நாளுக்கு நாள் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையும் இணையம் வழியாக தொடர்பு கொள்வதும் அதிகரித்து வரும் நிலையில்,பலரும் இதிலுள்ள ஆபத்தை உணராமல் சைபர் மோசடியில் சிக்கி இரையாகி வருகிறார்கள்.
முக்கியமாக வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம், பகுதி நேர வேலை, யூடுயூப் வீடியோ பார்த்து சம்பாதியுங்கள் என பல வகைகளில் இந்த மோசடிகள் நடைபெறுகிறது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவிலும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ரீதியாகவும் பண ரீதியாகவும் நிறைய இழப்புகள் ஏற்படும். ஆகையால் இதை உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.
புகார் கொடுக்க முடிவு செய்துவிட்டால், ஒன்று, நேரடியாக காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் அல்லது தேசிய சைபர் க்ரைம் புகாரளிக்கும் தளத்திற்குச் சென்று ஆன்லைனில் புகார் அளிக்கலாம். சைபர் குற்றங்கள் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் புகாரளிக்க வேண்டும்.
அப்போதுதான் போலீசாரால் பணப் பரிவர்த்தனையை உடனடியாக டிராக் செய்ய முடியும்.
சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆன்லைன் வழியாக புகார் செய்வதற்கு வசதியாக தேசிய சைபர் குற்றங்கள் புகாரளிக்கும் தளத்தை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
முக்கியமாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த தளத்தில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், இதற்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள எண் 1930.
தேசிய சைபர் குற்றங்கள் புகாரளிக்கும் தளத்தில் எப்படி புகார் பதிவு செய்வது?
✅ உங்களுடைய பிரவுஸரை திறந்து, அதில் cyber crime website என்ற இணைய பக்கத்தின் முகவரியை டைப் செய்யுங்கள்.
✅ அதன் home page-ல், “REPORT CYBER CRIME” என்பதை க்ளிக் செய்யுங்கள்.
✅ அடுத்த பக்கத்தில், நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை படித்து உறுதி செய்யவும்.
✅ அடுத்து, “பிற சைபர் க்ரைம் புகார்” என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
✅ அதில் “Citizen Login” என்பதை தேர்வு செய்து, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, போன் நம்பர் போன்ற விவரங்களை பதிவு செய்யுங்கள்.
✅ உங்கள் மொபைல் போனுக்கு வந்திருக்கும் OTP எண்ணை இப்போது பதிவு செய்யுங்கள். அதன் கீழுள்ள CAPTCHA நிரப்பி, Submit என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
✅ அடுத்த பக்கத்தில், நீங்கள் கொடுக்க விரும்பிய சைபர் க்ரைம் குறித்த விவரங்களை தெரிவியுங்கள்.
- இதன் படிவம் நான்கு பிரிவுகளாக இருக்கும்: பொதுவான தகவல், பாதிக்கப்படோரின் தகவல், CyberCrime data மற்றும் முன்னோட்டம். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள முக்கியமான விவரங்களை நிரப்புங்கள்.
✅ நீங்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தும் சரியா என பார்த்த பின்பு, sumbit button கிளிக் செய்யுங்கள்.
✅ அடுத்ததாக, நடைபெற்ற சம்பவத்தின் முழு விவரங்கள் அடங்கிய பக்கம் வரும். இதில் முழு விவரங்களையும், files அல்லது Screenshot போன்ற குற்றம் நடைபெற்றதற்கான ஆதாரத்தையும் அளியுங்கள். எல்லா விவரங்களையும் நிரப்பியதும், அதை “save” செய்து அடுத்த பக்கத்தை க்ளிக் செய்யுங்கள்.
✅ அடுத்த பக்கத்தில், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர்களின் விவரங்களை நிரப்ப வேண்டும். அப்படி ஏதாவது தகவல் தெரிந்தால், இதில் நிரப்புங்கள்.
✅ நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரிதானா என பார்த்த பின்பு, “submit” பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
✅ இப்போது, உங்கள் புகார் பதிவு செய்யப்பட்டதற்கான message உங்களுக்கு வரும். அதோடு புகாரின் அடையாள எண் மற்றும் இது தொடர்பான பிற தகவல்கள் அனைத்தும் உங்கள் Email-லாக வரும்.
மேலும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை, லாட்டரி மோசடி, ஏடிஎம் மோசடி, இணைய வங்கி மோசடி போன்ற எந்தவித சைபர் மோசடி குறித்தும் புகார் செய்யும் போது, குற்றம் நடைபெற்றதற்கான ஆதாரத்தையும் சேர்த்தே சமர்பிக்க வேண்டும்.
கூடுதலாக, வங்கி ஸ்டேட்மெண்ட், முகவரி, அடையாள அட்டை, சந்தேகப்படும் படியாக உங்களுக்கு வந்த மெசேஜ், மின்னஞ்சல் போன்றவற்றையும் இதனோடு சேர்த்து சமர்பிக்க வேண்டும்.
Comments
Post a Comment